சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன் 14.2.23 வாரம்210

சந்தம் சிந்தும்
வாரம் 210

மாசிப்பூ

மாசிப்
பனிபடந்த
சோலையில்
ஞாயிற்றுக்
கீற்று
வாள் கொண்டு
கிழித்து
ஒளி தரும்
வேளையில்
மீன் விழி
துயில்
அலர்ந்து
வெண்டை
விரல்
சொல்லும்
அபிநயத்தோடு
வெள்ளை
ரோஜா
பறித்து
தோகை கூந்தலில்
சூட்டி
மதி முகம்
நாண நின்றாள்

க.குமரன்
யாழ்