சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 227

பசுமை

கனவுகளில் மிதக்கும்
கண்களை
காண பல கண்கள்
குத்து விளக்காக
மத்தியில் அவளை
ஒப்பனைப் படுத்தி வைத்து

கமரா கண்களின்
ஊடாக
அவள் மேனி முழுவதும்
ஊடுஉருவுகின்றது கண்கள்!

கூச்சம் பயம்
பதட்டம் தடுக்க
விரைப்பாகி சிலையாக
உறைகின்றாள்
பசுமை நிறைந்த கனவுளில்
நாளைய நடிகை

க.குமரன்
யேர்மனி