வியாழன் கவிதை

க.குமரன் 11.5.23

வியாழன் கவி
ஆக்கம் 113

வெறுமை போக்கும் பசுமை

குழை தளை
கும்பல் குவியல்
கூட்டிப் பெருக்கி
கூட்டுப் பசளையாகுது !

இயற்கை பசளை
இன்னல்கள் அற்றது
உயிரியல் பொருள்கள்
உடலுக்கு வலுவாகுது!

மண்ணை பார்த்து உழைத்தால்
மனதுக்கு களிப்பு
காலமும் கால நிலையும்
கூடித்தரும் அறுவடை செழிப்பு

ஊண் உடம்பு வேர்த்து
உடல் உறுதி பெற்று
பாடுபடும் உழைப்பு
பலன் தருமே
பாருக்கு என்றும்!

க.குமரன்
யேர்மனி