விழிப்பு
உன் நிலை
அறிய
என் மடி
சுமந்து
தாய் என
ஆனபின்னே
தாய்மையை
உணர்ந்தேன் அம்மா
காலங்கள் ஓடி
நாட்களும் ஓடி
நாட்கள் ஆன பின்னே
உன் நிலை
உணர்ந்து
உருகிறேன் அம்மா
வாய்ப்பது கிடைத்தால் வந்து
உந்தன் மடியில்
கதைகள் பல
சொல்லி
கரைந்திடுவேன் அம்மா!
அன்புகள் பல
வந்தும்
உன் அன்பின்
முன்னே
அனைத்துமே
தோற்றும் அம்மா
தினம் ஒன்றில்
நினைக்காமல்
நிதம் உன்னை
நினைக்கின்றேன் அம்மா ! அம்மா
க.குமரன.