சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன் யேர்மனி 28.2.23

சந்தம் சிந்தும்
வாரம் 212

மொழி

என் மொழி தமிழ்
அன்னை பழக்கிய தமிழ்
அன்பை உணர்த்திய தமிழ்
சொந்தங்கள் பேசியதும் தமிழ்

பாடம் படித்ததுவும் தமிழ்
பயன்கள பெற்றதும் தமிழ்
ஓலையில் பார்த்ததுவும் தமிழ்
ஓராயிரம் ஆண்டுகள
வாழ்கின்றதுவும் தமிழ் !

அந்நிய மொழியை புரியவைத்துவும். தமிழ்
அங்கே நிலைப்பதுவும் தமிழ்
என்னோடு இருக்பதுவும் தமிழ்
என் சந்ததியின பரிவத்தனையும் தமிழ்

க.குமரன்
யேர்மனி