வியாழன் கவிதை

க.குமரன் ஆக்கம்102 (23.2.23)

வியாழன் கவி
ஆக்கம் 102

மண்

பத்தை படர்ந்த
தட்டாந்தரையை
வைகோ இயந்திரம்
ஒடி
குழி நிரவி

பிளேட்டு போட்டு
உழுது
நிலையம் எடுத்து
குழா்ய்கிணறு அடித்து

கொட்டில் போட்டு
மின் எடுத்து
வாழை மரவள்ளி
வெங்காயம் பூசணி போட்டு

மண்ணை நம்பி
நான் நிற்கிறேன்
மனிதரைப். போலே
ஏமாற்றாதே
நீயும மண்ணே !

க.குமரன்
யேர்மனி