சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம

சந்தம் சிந்தும் சந்திப்பு

பசுமை

சில்லென்ற சிட்டுக்கள் சுற்றிப் பறந்து
கொல்லைப் புறத்தில் கொப்புகள் ஊடே
கொஞ்சிக் குலாவிக் கதைகள் பேசிடும்
தஞ்சம் புகுந்திடும் துளிர்விடும் பசுமைக்குள்

பிறக்கும் வசந்தத்தில் பசுமை துளிர்க்க
உறக்கம் கலைக்கும் உலாவிடும் புறாக்கள்
பறந்துமே புள்ளினம் பல்லிசை ஒலிக்க
பல்லினப் பறவைகள் பசுமையின் செழிப்பில்

ஒற்றுமையாய்க் கூடி உல்லாசமாய்ப் பறக்கும்
வேற்றுமை இல்லாப் புள்ளினக் கூட்டம்…

கோசலா ஞானம்.