சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

நினைவு நாள்

கனத்த திங்கள் கார்த்திகைத் திங்கள்
மனங்கள் நொந்து மகிழ்வும் தொலைந்து
தினமும் நினைவுநாள் துயரம் தாங்க
இனத்தின் விடுதலைக்காய் இன்னுயிர் ஈந்த

கண்மணிகளை எங்கும் காணோம் என்று
கண்ணீர் சிந்தும் கார்த்திகைத் திங்கள்
மண்ணை உயிராய் மனதில் சுமந்து
எண்ணம் எல்லாம் எங்கள் நிலம்மீட்க

தங்கள் உயிரைத் தியாகம் செய்த
எங்கள் மாவீர்ரை என்றும் மறவோம்…

கோசலா ஞானம்.