சந்தம் சிந்தும் சந்திப்பு
சாதனை
சிந்தனை பெருகிட சுறுசுறுப்பு ஓங்கிட
மந்தநிலை அகன்று முயற்சி குன்றாய்
உந்துதல் ஓங்க உயர்வு நிச்சயம்
சிந்திடும் வியர்வை செழிப்பைத் தரவே
வேதனை அகன்று வலிமை பிறக்கும்
சாதனை மாந்தர் சரித்திரம் படைப்பர்
சோதனை உடைத்து துலங்கிய வாழ்வில்
மாதர் மேன்மை மகிமையுடன் சிறக்குமே….
கோசலா ஞானம்.