சந்தம் சிந்தும் சந்திப்பு
“ மாவீர்ரே”
மண்ணில் விளைந்த முத்துக்களே மாவீர்ரே!
மண்மாதா ஈன்றெடுத்த மாவீரச் சொந்தங்களே!
புண்பட்ட இதயங்கள் பண்பட்டு வளர்வதற்கே
கொண்ட கொள்கைகள் கடுகளவும் மாறாமல்
மண்மாதா விலங்குடைத்து மீட்க உயிர்கொடுத்தீர்
வண்டமிழ்ப் புதல்வராய் வீறுநடை போட்டீர்கள்
எண்ணத்தில் நம்பிக்கை எப்பொழுதும் தளராது
மண்பட்ட வேதனையை மலர்தூவி வணங்கவைத்து
கண்கட்டி வித்தையெல்லாம் காற்றோடு போகவிட்டு
மண்வாசனை நினைப்போடு மூச்சிழந்து போனீர்கள்…
கோசலா ஞானம்.