சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

குழலோசை

குட்டி அப்பன் குழலோசை கேட்டதும்
கட்டிப் போட்டுமே காதினிக்கச் செய்திடும்
எந்த இசையும் எட்டாது பையனிசைக்கு
சந்தத்தில் ரீங்காரம் சிறப்பாக இனித்திடுமே

மந்திரத்தால் கட்டுவது மயக்கத்தைத் தருவது
சுந்தரத் தமிழாலே சுருதியுடன் பாடினாலே
புல்லாங் குழலிசைப் பாட்டு இனித்திட
சில்லென உடலை சிலுசிலுக்கச் செய்திடுமே

பூவரசம் இலையின் புல்லாங் குழலோசை
தாவரத்தின் மகிமையைத் தொல்லியமாய் சொல்லிடுமே
பூவரசம் இலையை பக்குவமாய்ப் பறித்து
புல்லாங் குழலிசையாய் பீப்பீ ஊதிடுவோம்…

கோசலா ஞானம்.