சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

விடுமுறை

பள்ளி விடுமுறை பாலகர் களிப்பு
துள்ளி மனமும் துரிதமாய் இயங்கும்
அள்ளி அணைக்க அருமை நட்பும்
கள்ள மில்லாக் களிப்பு நாடுநாடாய்

பூமரச் சோலைகள் பூத்துக் குலுங்க
பார்த்து இரசித்து பலனைப் பெறவே
வந்தது வசந்தம் வீசிடச் சுகந்தம்
விடுமுறை களிக்க விரைவர் நாடுநாடாய்

கூட்டாய் குடும்பம் குதூகலம் காண
வாட்டம் இன்றி விடுமுறை களிக்க
தீட்டும் திட்டம் தந்திடும் களிப்பு….

கோசலா ஞானம்.