சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பழமை

வாழும் வாழ்வில் வசந்தம் பெறவே
வாழ்ந்தார் பழமையில் எழிலையும் கண்டே
கூட்டாய் இருந்து கூட்டாஞ் சொறுண்டு
கூடி மகிழ்ந்த பழம்பெரும் காலம்

மீட்டுப் பார்த்தால் மெய்யும் சிலிர்க்கும்
மீண்டும் வருமா அக்காலம் அதுவே
கிட்டிப் புல்லும் எட்டி அடிக்க
கிறுகிறுக்கும் மனமும் எட்டிப் பிடித்து

நினைக்க நினைக்க இனிக்கும் பழமை
நீண்ட கதையும் சொல்லிடப் பாட்டியும் இல்லை
பழங்கதை கேட்டிடப் பாலகர் களுக்கும் பொறுமை இல்லை….