சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பக்குவம் தந்த ஆசான்

குன்றிலிருக்கும் குலதெய்வம் ஆசான்
என்றும் எமக்குமே ஏணியாய் – நின்றுமே
ஊக்கம் தருகின்ற உன்னத பண்பாளர்
நோக்கம் கருதாத நிறைவு

நிறைகுட மாகவே நேர்த்தியாய்க் கற்கக்
கறையில்லா( து) ஊட்டுகின்ற கல்வி- துறைசார்பாய்
ஏற்றம் வரவே எழுத்தறி வித்தகுரு
போற்றிட நாமும் பணிவு

பணிவுமே வாத்தியாரின் பக்குவம் தந்ததே
துணிவாய் மரபில் துலங்கி – மணிமணியாய்
சற்றும் தயங்காச் சரஸ்வதி தேவியும்
பற்றாய் பயிற்றினார் பார்த்து.

கோசலா ஞானம்.