சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
தீயில் எரியும் எம்தீவு

கடவுள் தந்த கண்கவர் தீவு
கடந்திட முடியாத கண்ணீர்க் கதைகள்
படபடக் கின்ற பயங்கர நிகழ்வுகள்
சுடச்சுட அறுசுவை சுவைத்திடும் தீவு

சுற்றுலாப் பயணிகள் சுற்றும் தீவு
சுதந்திரம் இன்றித் தீயில் எரியுது
பற்று நிறைந்த பசுமைத் தீவு
பயணிகளை ஈர்க்கும் பகலவன் ஒளியில்

எத்தனை அழகு கொட்டிக் கிடக்கு
எம்தாய்த் திருநாட் டிலே