சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பெற்றிட்ட பேறு பேரப் பிள்ளைகள்

பெற்றிட்ட பேறில் பெருமையும் வந்திடும் – பேரப்
பிள்ளைகள் முத்தம் பூரிப்பால் மகிழ்வுறும்
வற்றாக் கடலாய் விடியலைத் தந்திடும்
வந்திடும் இன்பம் வரமாய்ச் சுரந்திடும்

வெள்ளை மனத்துடன் வேடிக்கை காட்ட
உள்ளம் பொங்கிடும் உவகை என்னே!!!
கள்ளம் இல்லைக் கபடம் இல்லை
கொஞ்சிக் குலாவிக் குதூகலம் காண்கையில்

பெற்றிட்ட பேறு பேரப் பிள்ளைகள்
கற்றுத் தருகிறார் களிப்பின் பெருமையை
உற்றுப் பார்த்து உவகை அடைவோம்
உழலும் மனதுக்கு உரமாய் எடுப்போம்…