சந்தம் சிந்தும் சந்திப்பு
பட்டினி
இயற்கையுடன் இணைந்த இதமான வாழ்வு
செயற்கையும் இல்லை சீற்றமும் இல்லை
உயர்ந்த நோக்கம் உன்னத உழைப்பு
நோயற்ற வாழ்வு நோகாத மனங்கள்
கட்டுடல் காக்கும் கமக்காரன் தொழிலும்
பட்டினி போக்கி பசியை நீக்கிடும்
வெட்டிப் பேச்சும் வீண்விவாத முமேவாழ்வில்
கிட்டவும் வாராது குரோதமும் கிடையாது
முட்டி மோதுவதும் முரண்பாடு காட்டுவதும்
கட்டுக் கோப்பும் குலைந்தகடு கதிவாழ்வும்
பட்டினிச் சாவும் பெருகுது பாரில்…..
கோசலா ஞானம்