சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

முள்ளிவாய்க்கால்

பண்பட்ட நிலத்துப் பயிர்கள் புண்பட்டுக் கருகி
விண்முட்ட அதிரும் செல்லில் கண்மூடிச் சரிந்ததை
எண்ணிடக் கண்களில் இரத்தக் கண்ணீர் சொரிகிறதே!
மண்கண்ட வேதனைகளை மரணித்தாலும் மறக்கத் தகுமோ?

குஞ்சுகளின் பிஞ்சுகளின் குருதிகளும் ஆறாய் ஓடியதே
நெஞ்சு பிளக்கச் செய்கிறதே
வஞ்சகம் இல்லாப் பிஞ்சுக் குழந்தை
அரசியல் பேசியதா? அன்றி ஆயுதம் ஏந்தியதா?

மண்ணில் விளைந்த முத்துக்களின் மரணோலமும்
முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மாந்தரை
எண்ணித் துடியாய் துடிக்குது மனமே!
கண்ணீர் ஆறாய்ப் பெருக கதறி நின்றோமன்று….

கோசலா ஞானம்.