சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

காணி

தென்னை பனைமரத் தோப்பும் சிதைவடைய
ஒன்றாய் வாழ்ந்தவீடும் ஒவ்வொன்றாய்க் களவுபோக
மல்லிகைப் பந்தலும் மலர்களின் வாசனையும்
உல்லாச வாழ்வும் உருக்குலைந்தும் போக

எங்கள் காணி எங்கே எனத்தேடல்
அங்கிருந்த வேலியின் எல்லையையும் காணோம்
ஒட்டி உறவாடிய உறவையுமே காணோம்
பட்டியில் நின்ற பால்மாடையும் காணோமே

பந்தமும் குலைய பட்டியும் குலைந்து
சொந்தக் காணியும் சருகுகள் மூட
வெந்து மனமும் வேதனையில் வாடுகிறோம்
இந்தப் புலப்பெயர் இருப்பிடத்தில் இருந்தே….

கோசலா ஞானம்.