சந்தம் சிந்தும் சந்திப்பு
விழிப்பு
————-
உறக்கினாரல் விழிப்பு
வரத்தானே வேண்டும்
உறவுகளுக்குள்ளே சமரசம்
விழிப்புணர்வு மேலோங்கி
நிற்கிறது கண்கூடு
மண்ணில் பிறந்த
மாந்தருக்கு மனதில்
மனிதநேயம் மிகுந்ததே
விழிப்பு விதிவிலக்கல்ல
பெண்ணிற்கு என்றும்
தன்மானம் காக்கும்
விழிப்பு வேண்டும்
நாட்டு மக்களுக்கு தம்
நாட்டைக் காக்கும்
விழிப்புணர்வு வேண்டும்
விழித்துக் கொண்டு
தூங்கும் மனிதரை
என்ன சொல்ல
விழியாலே மயக்கும்
மாயைதான் வெல்ல
புவிதனில் வாழும்
ஜீவராசிகள் விழிப்புடன்
வாழ புவிசிறக்குமே!
கெங்கா ஸ்ரான்லி
6.5.24