சந்தம் சிந்தும் சந்திப்பு
அழகு
———
வானத்தில் நிலவு அழகு
வண்ணமயிலின் ஆடல் அழகு
வண்ணாத்தி பூச்சியின் சிறகழகு
பெண்ணின் பொறுமை அழகு
அழகு அழகு அனைத்தும் அழகு
குழந்தையின் சிரிப்பு அழகு
குழந்தையின் நடை அழகு
மழலையின் மொழி அழகு
மானின் விழிகள் அழகு
மீனின் கயல் அழகு
தாயின் அன்பு அழகு
சேயின் புன்னகை அழகு
நல்ல மனையாள் அழகு
இல்லம் ஒரு கோவில் அழகு
இறைவன் படைத்த அனைத்தும் அழகே!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
29.4.24