வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

கடந்து வந்த பாதையில்
————
உலகம் உருண்டை எனச் சொன்னவர்
உயிரையே பறித்தனர்
உலகம் உருண்டு கொண்டிருப்பதால்
உணர்வுகளும் உருளுது எனவே
மக்கள் மனமும் குணமும் மாறுதல் தரமே

மனுதர்மம் கொள்கைகள் மக்களிடையே தேடல்
எக்காலமும் எதுவும் நிலைத்தது இல்லை
அதுவும் சுழற்சி காண்கிறது இங்கே
ஆரம்பம் அடிஎடுத்து வைக்கையில்
அம்பை விட்டது போல் ஒருவேகம்
காலப்போக்கில் தான் கனமங்கே தெரிந்தது
கடந்து வந்த பாதை கல்லும் முள்ளும் நிறைந்தது
அது போல பாமுகமும் கடந்து வந்த பாதை
சுமூகமான தல்ல
எத்தையோ வலிகள் துன்பங்கள் தாண்டியே வந்தது
ஆனாலும் இடையில் விடாது கொண்ட கொள்கையில்
தடம் பதித்து விட்டது
அடுத்த தலைமுறை நோக்கி
அவர்தம் வளர்ச்சி கண்டு
அயராது உழைத்து உருவாக்கி
இன்று சாதனை படைத்து விட்டது
உழைப்பின் உயர்வு இன்று 1250. வது நிகழ்வு
ஆனந்தம் பெருக் கூற்று
இணையர்கள் இணைந்து பணியாற்றும்
உன்னத சேவை
என்றும் தொடர நல் வாழ்த்துகள்
நிறைவேற்றலில் உங்கள் கொள்கை
நாமும் பின்வருவோம்
வாழ்க வாழ்க!