சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

உயர்வு யாரிடம்

தன்னைத் தானே
புகழ்ந்து கொள்ளும்
தகுதியில்லா மாந்தரை
இகழ்தல் தகும்.
நன்மை பெறவேண்டின்
நல்லவிதமாகப் பேசிடுவர்.
நன்மையது பெற்றபின்
நயவஞ்சகமாக கழற்றிடுவர்.
பொங்குகின்ற பூமீயில்
புழுக்களின் வேலையது.
தங்கி வைக்கும் செயலுக்கு
தாரக மந்திரமாம்.
உன் செயல் நடப்பதற்கு
ஊர்ச்சனம் வேண்டும் உனக்கு.
உனது செயல் முடிந்துவிட்டால்
ஊதாசீனம் செய்துவிடும்.
நன்றியுடன் வாழும்
ஐந்தறிவு ஜீவன்.
நன்றியை மறந்ததே
ஆறறிவு ஜீவன்.
இதில் பெருந்தன்மை
யாரிடமுள்ளது
ஆறறிவை விட ஐந்தறிவு
உயர்ந்து விட்டதே.

கெங்கா ஸ்டான்லி