தொழிலாளி
முதலாளித்துவம் முனைந்து
நின்ற காலம்.
தொழிலாளித்துவம் அடக்கப்
பட்ட காலம்.
தொழிலாளியின் சம்பளம்
மிகக் குறைவு.
தொழிலாலியின் வேலை நேரம்
மிகக் கூடுதலானது.
தட்டிக்கேட்க விளைந்தான்
ஒரு மனிதன் கார்ல் மாக்ஸ்.
விட்டுக்கொடுத்தாள் அவன்
மனைவி ஏழையானாள்.
தொழிலாளர் போராட்டம்
தொட்டது ஒரு எல்லை.
வேலை நேரம் 8 மணித்தியாலம்.
சம்பளம் கொஞ்ச உயர்வு.
அந்தக் காலம் அடிமைப்
படுத்தினார் மக்களை.
இந்தக் காலம் விழித்து
விட்டனர் மக்களோ.
முதலாளித்துவம் முடங்கிவிட்டது
முடங்கினாலும் தடங்கலுமுன்று
தொழிலாளித்துவம் வென்றது
முழுதும் இன்னும் முடிவும் இல்லை.
கெங்கா ஸ்டான்லி