சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

கலகமும் கற்பனையும்

கலகம் இல்லா நாடில்லை.
கலக்கம் இல்லா மனிதரில்லை.
விலக்கும் சில மனிதமும்,
விலங்கு போன்ற செயல்களும்.

கற்பனையில் வளம் கண்ட மனிதர்
கற்றிடும் நற்பண்பு இம் மண்ணில்.
விற்பல விண்ணர் விதைப்பார்
சொற்பல கவிதையில் ஆண்டே.

கலக்கிடும் ஆழ்கடலும் ஒரு நாள்
மிதந்திடும் சேறும் அதனால்.
கலங்கிய மனதின் எண்ணங்கள்
சிதறிடும் சினத்தின் கனலாய்.

கலகமும் கற்பனையும் இணைந்ததே
உயிரினங்களின் ஒட்டு மொத்த வாழ்வு.
காடு மேடு மலை கண்டதும்
இயற்கையின் இந்தத் திறன் தான் கூறு.

கெங்கா ஸ்டான்லி