அதனிலும் அரிது
அரிது அரிது மானிடாகப் பிறப்பது.
அதனிலும் அரிது பெண்ணாகப் பிறப்பது.
வஞ்சியராகப் பிறந்தால் வஞ்சனை கூடாது
இஞ்சியும் இறுமாப்பு கொள்ளக்கூடாது.
கண்ணியம் கட்டுப்பாடு
மனிதருக்கு இருக்கவேண்டும்.
புண்ணியம் செய்தால் போதாது
புரிந்தும் இருக்கவேண்டும்.
நாடு நிம்மதியாக இருக்கவேண்டும்.
வீடு அமைதியாக இருக்கவேண்டும்.
வீட்டிலிருந்து ஆரம்பிக்கும் எதுவும்
நாட்டினையும் நல்லபடி உருவாக்கும்.
சிந்தித்து செயல்படுவோர் மாந்தர்
சிந்தனை நிறைந்ததால் சிறப்பானவன்.
அதுதான் ஆறறிவு மனிதனுக்கு கென்றார்.
அதனிலும் அரிது நம்பிக்கையுள்ளது.
கஷ்டம் கலகம் துன்பம் நேர்கையில்
கடவுளிடமே காரணம் கேட்கும் மனிதன்.
தளராது நம்பிக்கை கைகொண்டு சென்று
தன்னையே செல்லும் புத்திசாலி.
நினைத்தை முடிக்கவேண்டும் எனப்
பேராசையால்.
மக்களைக் கொன்று குவிக்கும் இராணுவம்
மக்கள் உயிர்களை அரிது என எண்ணி.
அதனிலும் அரிதென்றார் குழ்ந்தைகள். பெண்கள்
என்றும் இரக்கமின்றி என்னவெலாம் செய்கிறார்.
மானிடா மனிதம் போற்றி ஜெயம் காண்
அதனிலும் அரிது உனது மகிழ்வை நீயே தெரிவுசெய்.
கெங்கா ஸ்ரான்லி