திமிர்
தமிழர் என்ற திமிர்
செம்மொழி தாய்மொழி
என்ற திமிர்.
உலகளாவிய தமிழ்
பேசப்படும் திமிர்.
அரச பதவியில் பெண்
அதிகாரத்தில் பெண்.
எல்லாத் தொழிலும்
ஏற்றம் கண்டவள்
அதனால் கொண்டாள்
திமிர்.
திமிர் பிடித்த குதிரை
கடிவாளம் பிடிப்பினும்
திமிரும்.
சில மனிதரும் மமதையால்
திமிர் பிடித்து திமிறுகிறார்.
மனித நேயத்திற்குள் திமிர்
எட்டிப் பார்க்காது.
மாந்த இனம் அதற்குள்
தலை வைக்காது.
மனிதரே திமிர் பிடித்து
அலையாதீர்.
திமிர் பிடித்த பெரியவரால்
சில நாடே அழிந்தது
திமிர் விட்டு பாச நேசம்
கொள்ளுங்கள்.
வளமும் வனப்பும்
வாழ்வில் செழிக்கும்
கெங்கா ஸ்ரான்லி