சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சாந்தி

ஆன்மீகம் தரும்
மனதுக்கு சாந்தி.
மனம் அமைதி பெற்றால்
சாந்தி பெறும் உள்ளம்.

இறந்தவர் ஆன்மா
இறைபதம் அடைய
ஈகை செய்தல்
சாந்தி தரும்.

முதியோர் இல்லமதில்
முதுமைப் பெற்றாரை
முடக்கிய மகனுக்கு
ஏது மனச் சாந்தி.

தன்னலமற்ற சேவை
தருமே சாந்தி.
சுய நலமுள்ள வருக்கு
கெடுமே சாந்தி.

மெளனமாக இருந்தால்
மனம் அடையும் சாந்தி.
குறள் வழி ஒழுகினால்
குமூகமே அடையும் சாந்தி.

கெங்கா ஸ்ரான்லி