வியாழன் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

நெஞ்சினிலே
———-
காதல் நெஞ்சில் கருணை உள்ளம்
தேடும் ஆற்றல் தினமும் மெய்க்கும்
வாழ்வில் வசந்தம் வீசும் மட்டும்
பாடும் கவிதை மனதில் மட்டும்
நெஞ்சமெல்லம் நினைவுகள் நித்தம் நீயே
வஞ்சமில்லா மாயோனே மனதில் கொண்டே
துஞ்சும் எனது கண்கள் சோகமதில்
விஞ்சும் விழிநீர் இருவிழிகளிலிருந்தே
மாற்ற நினைக்கும் மனமோ இல்லை
தேற்ற ம் துடிக்கும் நினைவுகள் எல்லை
காற்றை மறிக்கும் கனவுகள் என்ன
மாறிவிடும் என்ற நினைப்பா சொல்ல
நித்தம் நித்தம் உம்நினைவில் ஏக்கமுடன்
சத்தமின்றி தனிமையிலே தவித்திடும் உள்மனதோ
எக்கணமும் உம்வரவு என்ற மாயை மனம்
தெஞ்சினிலே புலம்பிடவே
நிஐமில்லா கற்பனையில
நானும் வாழ்ந்திடவா.
கெங்கா ஸ்ரான்லி