சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
தீப ஒளியே
————-
மங்கல காரிய மணிவிளக்கே
மனதில் தோன்றும் அகலவிளக்கே
எங்கில் பார்க்கிலும் ஒளி வெள்ளமே
ஓங்கி அகற்றும் இருளையே
இருள் அகற்ற ஒளி வீசும் தீபங்கள்
அருள் கொடுக்க ஆண்டவனின் அருளொளி
மருளும் மாந்தன் மனவலி
வெருளும் பயத்தில் முகவொளி
தீவினைகள் எல்லாம் விரண்டோட
பாவ்வினை பறந்தோட
மாயவினை மாயமாக
தேயும் பிறையும் தெய்வீகமாக
தீப ஒளியேற்றி திரட்டிடுவோம் செல்வமதை
தீப ஒளியால் வீட்டையே ஒளிமயமாக்குவோம்
தீப ஒளியின் செம்மையில்
தீரட்டும் தீயவைகள்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
5.11.23