சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
மீண்டெழு
———/
புயலால் அழிந்த வயலை
புதுப்பொலிவாக்க மீண்டெழுந்தான்
உழவன்
துவண்டு விடாத ஊக்கத்்தால்
தொடர்ந்துழுது பயிர் வளர்த்து
பாங்குடன் வாழ்ந்தான்
துயரத்தால் ஏங்கும் உள்ளம்
சோர்ந்து விடும் நேரத்தில்
காட்டும் பரிவு மீண்டெழ வைக்குமே
வயோதிபம் என்று வாழ்ந்திருந்த வேளை
மனம் தந்த தையிரியம் மீண்டெழ வைக்குமே
வாழ்ந்த மண்ணை விட்டு வந்து
வளம் கொழிக்கும் நாட்டில் வசித்தால்
மண்ணை மீட்கும் போரில்
மீண்டெழுவார் யாரோ
விழ விழ எழுந்தால் தான்
வீரமும் வெல்ல முடியும்
பாரினில் எம்மையும் காட்ட முடியும்
மண்ணில் விழுந்தால்
எழும்பி மண்ணைத் தட்டி விட்டு
மீண்டெழு
உனது பணியை தொடர்ந்து செய்