வலைப்பூ
————-
எண்ணங்கள் திண்ணமானல்
வண்ணங்கள் அழகுபெறும்
அன்பினில் ஆழ்ந்த உள்ளம்
அதனையே நினைத்து வாழும்
வலையில் சிக்கிய மான்
வலையில் சிக்கிய புறா
புறாவோ வலையுடன் பறந்தது
மானோ வலையில் விழுந்தது
வலைப் பூவிற்குள் விழுந்து
வசமாக மாட்டிக்கொண்டு
விடுபட முடியாமல் த்த்தளிக்கும்
சில உயிரினம் சுடு நீருக்குள்
விழுந்த மீனாக துடிக்கிறது
வலைப்பூ வளத்தையும் தரும்
வீணான பழியையும் தரும்
எல்லாம் உணர்ந்து செய்தால்
வலைப்பூ வலையாக வடிவெடுக்கும்
விலையான நன்மை தரும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
26.9,23