சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
யோசி
———-
உங்களுடன் வாழ்ந்த வாழ்க்கை
உள்ளத்திற்கு தந்தது உவகை
தாங்கள் பேசிய வார்த்தை
நங்கியது மனதில் நிலையாய்
நீங்ககள் இருந்தபோது
தெரியவில்லைத் துன்பம்
நீங்கள் போனபின்பு
தெரிந்தது வெறுமை
எதிர்காலம் ஒரே கருமை
மனதிலே நிறைய வறுமை
உங்களைத் தவற விட்டது
யோசிக்கிறேன் விதியா என
இப்படி் நடக்குமென
யோசிக்கவில்லையே நான்
இப்ப யோசித்து அழுகின்றேன்
காலம் கடந்த செயல்
வாழ்க்கை என்றால்
இப்படித் தானோ
அன்பு எல்லாம்
மனதில் தேக்கி
ஆரோக்கியம் பாதுகாத்து
அக்கறை செயலில் காட்டி
பண்பில் நிறைகுடமாய்
முழுமை பெற்ற மனிதர்
யோசிக்கிறேன் நான் இன்னும்
வெறும்குடம்
யோசித்து யோசித்து எனை
இழந்தேன்
யாசித்து கேட்கின்றேன்
என்னவரை
யாசகமாய்க் கடவுளிடம்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி