சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
பெற்றோரே
——/
மண்ணில் நட்ட மரமெல்லாம்
மலிந்து குலுங்கி வளர்கையிலே
மக்கள் வாழ்வின் மரகதங்கள்
நன் மக்கள் பெற்ற பெற்றோரே
திருமண்த்தில் இணைந்து திருமதி ஆகி
வெகுமதியாக பிள்ளைகள் பெற்று
தருமிந்த கற்பகதரு எம்இனிய பெற்றோரே
தன்னலம்பாரா தன்சேவை
தனித்துவமாய் பூமிதனில் ஆற்றியவர்
பிள்ளைகளை தூக்கி விட்ட
ஏணியாய் இருந்தவரே
கள்ளமில்லா மனத்தினராய்
கபடமற்ற எண்ணத்திலே
நல்லதொரு தூரிகையாய்
நல்வண்ணம் நீர்வடிக்க
சொல்லவொரு சுகந்த மானவரே
சிற்பிகளாய் நீரிருந்து சிறந்த ஓவியமாய்
எம்மை வடித்தெடுக்க பட்ட கஷ்டம் எத்தனையோ
மற்றவரை மதித்து நாமும் மனித நேயமுடன் வாழ
கற்றுத் தந்தீர் கல்விதனை
பண்பாய் நாளுமே
எடுத்தியம்பி உமைவாழ்த்த.
என்கண்ணில் நீராம்பல்
பன்னீராய் விழுகிறதே
பாசமாக உம்மேலே
தடுத்திட கைகூட முன்வரவில்லை
பாசக் கரையலில்
அன்பான உமை ஆட்கொண்ட
ஆத்மார்த்தமான
எமது அன்பு எம் பெற்றோரே
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி