சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

தாங்கள் தாயகத்திலா பாவை அண்ணா
சந்தம் சிந்தும் கவிதை
ஆற்றல்
அன்பெனும் ஆற்றல்
அதீத தேற்றல்
அ ங்கேயும் உண்டாம்
மனதில் வற்றல்
கிழக்கில் உதிக்கின்ற
சூரியன்
மேற்கில் மறையுதே
இது யார் ஆற்றல்
பஞ்ச பூதங்களின் ஆற்றல்
பசுமை புரட்சி செய்யும் ஆற்றல்
சங்கம் அமைத்து தமிழ்
வளர்த்த ஆற்றல்
எங்கும் வியாபித்து ஏகோபிக்கும்
ஆற்றல்
இவை இப்படி இருக்க
மனிதனின் ஆற்றலோ
மகத்துவமானது
மண்ணிலே இவர் ஆற்றல்
விசித்திரமானது
தொழில் நுட்ப ஆற்றல்
தோண்டி தோண்டி துருவுவது
பழிகள் பல சுமந்து
பகடைக்காயும் ஆகுது
வழிகள் பல இருக்கு
வாழ்வை வளம்படுத்த
இழிசெயல் எலாம் விடுத்து
இனிமேல் ஒழுக்கமாய்
ஆற்றலோடு அமைதியாக
வாழ்க
கெங்கா ஸ்ரான்லி