சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
அத்திவாரம்
————
அடிக்கல் சரியாக பொட்ட அத்திவாரம்
கட்டிடம் அசையாமல் இருக்கும்
அத்திவாரம் சரியில்லையெனில்
கட்டிடம் தகிட நக திமி
என ஆட்டம் காணும்
கருவறையில் உருவாகும் சிசு
கருவறையின் ஆரோக்கியமான அத்திவாரம்
அங்குதான் உருவாகும் வாழ்வின் ஆதாரம்
ஆரோக்கிய மான சிசுவின் பரிமாணம்
திருமண வாழ்விலும் இணையரின்
புரிந்துணர்வு வாழ்க்கைப் படியின் அத்திவாரம்
புரிந்துணர்வு தகருமானால் பூகம்பந்தான்
அதனால் வெடிக்கும் விடியலில்லா வாழ்வு
எம்பெற்றோர் போட்ட அத்திவாரம்
கல்வி வாழ்வு என நல்ல
கட்டிடமாக நிமிர்ந்து நிற்கிறது
அந்த அத்திவாரத்தில் நிலையாக
நாமும் நிற்கின்றோம் இப்போது!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி