வியாழன் கவிதை

கெங்கா ஸ்டான்லி

அலையும் மனிதர்
வறுமை என்றும் நிலைப்பதில்லை.
சிறுமை ஒருபோதும் சிறப்பதில்லை.
வெறுமை மனத்தில் நிஜமுமில்லை.
பொறுமை ஒருநாள் வென்றுவிடும்.

காலச்சூழலில் கடமைகள் மறந்து
கோலங்கள் மாறினும்
காலைச்சுரியன் தன்
சுழற்சியை மாற்றவில்லை.

பூகோளப் பந்தில்
புதுப்புது மாற்றங்கள்.
ஆய்வகழ் கண்டதில்
அதிசயம் தான் நிதம்.

அறிவியல் மனிதனை மாற்றினாலும்
பொருளியல் அவனைத் துரத்துகிறதே.
வைகையில் வைக்கப்பட்ட
பெட்டகம் போல்
வளைந் தெங்கோ சென்றதுவே.

பொன் பொருள் புகழ் வேண்டி
புதுப்புது வியூகம் அமைத்து
கண்கவர் காட்சி கொண்டு
கலியுகத்தில் அலையும் மனிதர் இவர்.

கெங்கா ஸ்டான்லி