சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்டான்லி

ஆணவம்

அன்புக்கு உண்டோ
அடைக்கும் தாழ்.
முன்னுக்குப் பின்
முரணாகுமோ செய்யும் செயல்.

சொல்வது ஒன்று
செய்வது வேறு
சொல்லின் செல்வராம்
சொல்கிறார் பாரு.

உதட்டில் புன்னகை
உள்ளத்தில் நச்சுப்பை.
நான் சொல்வதே சரி
இந்த நான் கொண்டோர்
இன்று எங்கே சென்றனர்.

நானே உலகைப் படைத்தேன்
இறைவன் இப்படி ஆணவம் கொள்ளவில்லை.
ஆறறிவு படைத்த சில ஜென்மம்
உலகே தன் தன் கைக்குள் என
புலம்புகிறதே.

ஆணவத்தால் அனைத்தும் இழந்தவை
இலங்கை , உக்ரைன் , ரஷயா
இதற்கு எடுத்துக்காட்டே.
ஆணவம் களைந்து
அன்பு நெறி காட்டி
அறத்தால் வெல்க உலகு.

கெங்கா ஸ்டான்லி