அவை தேடும் மக்கள்
மயக்கும் மாலைப்பொழுது
தயவில் நாமும் மகிழ்ந்து.
தகிக்கும் வெயிலில் வியந்து
தவிக்கும் உயிரினம் தளர்ந்து.
நேற்று அப்படி இருந்த நிலை
இன்று குளிரில் கொஞ்சம் நடுங்கி
நாளை என்ன நடக்குமென
நயந்து நாமும் நாடித்தேட.
கோடை காலம் பிறந்தது
கோபியரும் ஆடல் பாடலுடன்.
மனமும் மகிழ்வில் திளைக்க
விடுமுறைக்கு மக்கள் பறக்க.
பறப்போர் பரவசம்
பல நாடுகள் பார்வை.
மறுப்போர் சிலர்
கடல் மட்டும் நாட.
இவை இல்லார் இல்லமதிலிருக்க
சுவை இல்லா மாந்தர்
சுருங்கியபடி தவிக்க
அவை தேடும் மக்கள்
அகிலம் செல்கிறார்.
கெங்கா ஸ்டான்லி.