பாமுக வெள்ளிவிழா
லண்டன் தமிழ் வானொலி
லாவகமாகி இன்று வெள்ளிவிழா.
லாவகத்தில் இலகுவல்ல
இறுக்கம் நெருக்கம் கண்டவேளை.
இடைவிடாது தொடர்ந்து
அயராது உழைத்து இன்று வெள்ளிவிழா.
தடைகள் பலவந்தும் உடைத்தெறிந்து
உயர்ந்து நிற்கும் லண்டன் தமிழ் வானொலியே
இன்று அகவை 25 வெள்ளிவிழா.
வந்தோர் போனோர் வளம் கண்டார்
நொந்தோர் செயலாம் நெகிழ்வுடன் மாற்றி,
நின்றொர் சிலரும் நெருக்கமாக உதவி
சென்றோர் நன்றியிலாது இழந்தனர் நட்பை.
கல்லெறி பட்ட மரம்போல
சொல்லெறி பட்டலும்.
கிழே விழாது மெல் நோக்கி
வாளரும் விருட்சம் இது.
இந்த விருட்சத்திலும் நாமும் ஒரு இலை
மகிழ்வுடன் மெருகுடன்
வாழ்த்தும் நவில்கின்றோம்
இயக்குனர் நடா மோகன், வாணிமோகன்
தம்பதியர்க்கு.
இன்னும் தொடரும் உம்பணி
காண்ட்டும் பல் விழாக்கள் தொடர்ந்து
பல்லாண்டு பல்லாண்டுகள்
தொடர்க வழி வழி வாழியவே.
கெங்கா ஸ்டான்லி