வியாழன் கவிதை

கெங்காஸ்ரான்லி

இருட்டில்…
————-
மாலை விரைவில் இருட்டி விடும்
காலை மேகமூட்டம் இருண்டிருக்கும்
பகல்பொழுது குறைவாகவே இருக்க
இரவோ கூடின நேரம் இருண்டிருக்கும்
வீடுகள் எல்லாம் அமைதி நிலவும்
றோட்டெல்லாம் வெறிச்சென இருக்கும்
மக்கள் நடமாட்டம் அருகியிருக்கும்
பாக்கள புனைய உள்ளம் ஏவும்
இருட்டிலே எல்லாமே சூனியம்
மரட்டும் பயமும் மனதில் தோன்ற
உருட்டும் சத்தம் ஓசை கேட்க
வெருட்டும் தாக்கம் விறைத்து நிற்க
இருட்டை விரும்புபவர் இரக்கமிலார்
பொருளும் பொன்னும் தேட்டமடைவார்
எண்ணும் யாவும் காரியமாக வேண்டி
பண்ணும் வேலை விண்ணென முடிப்பார்
நேரமாற்றம் ஐப்பசிக் கடைசியில்
காலமாற்றம் கடுங்குளிர் இல்லை
இலையும் கொட்ட மழையும் பெய்ய
அலையுது மனமோ விடியலைத் தேடி
நன்றியுடன்