வியாழன் கவிதை

குவலயமும் குளிர்ந்திடுமே

சர்வேஸ்வரி சிவருபன்

குவலயமும் குளிர்ந்திடுமே

தாவிவரும் முகில் கூட்டமேபாவி நிற்க மாட்டாயா
தூவிவிடும் மழைநீரை சேர்த்தனுப்ப மாட்டாயா
ஆவியாகப் பறக்கின்றதே அவனி
சாமிகூடப் பார்த்திருக்கார் பாரு
காமிநீயும் மழைத்துளியை மண்ணில்
சோம்பி மக்கள் கூம்பினர்
சோகம் கொண்டே வீழ்ந்தனர்
சாபம் போட்ட நிலையாகி
சாதிக்கின்றான் கதிரவன் சதிராடி
மாதமும் உச்சம் கொண்டது
நேரமும் நன்றாக அமைந்தது
கூறும் கூற்றை செவிசாய்ப்பாய்
காணும் உந்தன் விளையாட்டு

அமுதம் சிந்தும் நிலையாகி
அமுதமழையைப் பொழிவாயே
குமுதமாக வருவாய் என்றால்
குவலயமும் குளிர்ந்திடுமே
சர்வேஸ்வரி சிவருபன்