சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தம்

ஊக்கி!
தேனாம் பொழுது
தேக்கம் காணில்
மாற்றங் கூட்டும்
மந்திரக் கயிறாய்
மனத்தை இயக்கும்
மகுடிதானே ஊக்கி!

துவழும் தோளைத்
தூக்கி நிறுத்தி
துன்பப் படகைத்
துடுப்பாய் வலித்தே
இன்பக் கரையையின்
இலக்கைச் சுட்டும்!

ஊக்கியற்ற வாழ்வு
போக்கற்ற பொழுதாய்
தேக்கத்தைக் காணும்
தேனான ஆயுள்

விளக்கதன் சுடருக்கும்
வேண்டுமங்கே தூண்டுகின்ற விரல்கள்
கிழக்கதுவின் கதிராகி மின்ன
கீர்த்தியென ஊக்கியது தானே!

கீத்தா பரமானந்தன்13-02-2023