மார்கழி!
மார்கழிப் பெண்ணவள் மலர்ந்து வந்தாள்
மாறிடும் பருவத்தை மனத்தில் சொன்னாள்
கார்மழைப் பொழிவில் காதல் கொண்டே
கணமும் அணைத்தே களித்து நின்றாள்
ஊரெங்கும் புதுவெள்ளம் ஊற்றெனப் பாய்ந்திட
உருளுது ஆண்டும் ஓடி மறைதே
சோர்வுகள் நீங்கிச் சுகங்களை நிறைத்திட
சுழன்றுமே வருகிறாள் மாதத்தின் இறுதியாய்
பூம்பனி தூவப் புலருது காலை
பூரிப்பில் மண்மகள் தேகம் சிலிர்ப்பில்
ஆம்பலும் அல்லியும் அடங்கியே கிடக்க
அருணனின் வரவும் மெல்லக் குறையுது
பாரெங்கும் ஒளிருது பலவண்ணம் கொண்டே
பாலனின் பிறப்பின் பரவசம் நாடி
விலக்கியே இருளின் விசனங்கள் விரட்டி
விதவித அலங்காரம் வீதிகள் தோறும்
மலர்வுடன் சிரிக்கிறாள் மார்கழிப் பெண்ணாள்!
கீத்தா பரமானந்தன்