சாதனை!
சந்தம் சிந்தும்சந்திப்பு
வேதனைகளை வேரறுக்கும்
வீறுடை பயணம!
வீழ்ந்தவர் எழுந்திட
வித்திட்ட பாலம்!
காலநேரக் கணக்கின்றிக்
கனிந்திடும் தியாகம்
காண்கின்ற நிறைவினிலே
காட்சியாகும் பாகம்!
தொட்டவை துலங்க
தொடராம் உழைப்பில்
எட்டிடுமே சிகரத்தை
எழிலாகச் சாதனை!
சாதித்து வென்றவரின்
காட்சியான களிப்பெலாம்
சாட்சியாகி மிளிர்ந்தே
ஆட்சிசெய்யும் சாதனை!
போதனையல்ல இது
பொகிசமாம் ஏடு
மேதினியின் ஆயுளை
மெருகேற்றி வைத்தே
ஆழத்தட மாக்கிடும்
ஏதாமாம் சாதனை,
கீத்தா பரமானந்தன்21-02-2023