சந்தம் சிந்தும் சந்திப்பு!
விழிப்பு
களிப்பாகும் ஆயுளுக்கே
கருத்தினிலும் கடமையிலும்
கவனமுடை விழிப்பு வேண்டும்!
இருப்பினைக் காத்திடவும்
இலக்கினை வென்றிடவும்
துருப்பாகி விழிப்புத்தானே
தொய்வற்ற வழிபகரும்!
அஞ்ஞானப் போர்வையிடை
ஆக்கலைப் புதைக்கின்ற
அர்த்த்மற்ற மூடத்தினை
அம்பாகித் தகர்த்திடவே
ஆழக் கடலான
அறிவென்னும் விழிப்பு வேண்டும்!
நெஞ்னிலே ஈரமின்றி
நெருப்பாகிக் கருக்குகின்ற
நீசத்தனம் கொண்டோர்
நித்திலத்தில் நித்தமுமாய்
பொறுப்பாக வென்றிடவே
பெருநிதியே விழிப்புத்தானே!
துளிர்ப்பாகிச் செழித்திட்டே
துருவமென மின்னலிடும்
துவழாத நெஞ்சினையே
தொட்டுவரும் வெற்றியெல்லாம்
துள்ளலிடும் விழிப்புத்தானே!
கீத்தா பரமானந்தன்
06-05-24