பணம் !
பணமே உலகின் உயிர்நாடி
கணமும் உருட்டுது பின்னாடி
மனமும் அதற்குள் அடமானம்
மண்டியிட்டே தினம் யாகம்
பட்டமும் பதவியும் பணத்தாலே
சட்டமும் அதற்கு விலையாகும்
வட்டிகுட்டி பெயர் தாங்கி
உயிரையும் பறிக்குது இரையாக்கி
தாயும் பிள்ளையும் வேறாக்கி
தனித்து வைக்குது சொத்தாகி
நினைத்த செயல்கள் அத்தனையும்
முடித்து வைக்குது பணக்கடதாசி
பாசத்தையும் வேசமாக்கி
நேசத்தையும் நிர்மூலமாக்கி
வேசதாரிகளையும் வேந்தனாக்கி
வேடிக்கை காட்டுது விபரீதமாக்குது
உயிர்க்கும் ஆசைகளின் மூலதனம்
அழிக்கும் அவலங்களின் பிறப்பிடம்
துளிர்க்கும் துவேசங்களின் தரிப்பிடம்
களிப்பே தேடும் கருணையற்ற பணம்
கீத்தா பரமானந்தன்