விருப்பு! சந்தம் சிந்தும் சந்திப்பு!
வாழ்வின் துருப்பாகி
வலைவீசும் மூர்க்கம்
காழ்ப்பை உருவாக்கும்
கடிவாளமில்லா ஊக்கம்!
தோப்பாகி நிலைப்பதற்கும்
துணையாகும் பாகம்
ஆப்பாகி வீழ்த்திடும்
அகன்றிடும் போதில்!
விருப்பதே வாழ்வாய்
வீறுடை கணமாய்
ஒறுப்புக்கள் தாங்கி
உயர்த்திடும் ஏணியாய்!
விருப்புடை உழைப்பு
விண்ணையும் முட்டும்
பொறுப்புடை மனிதனாய்ப்
பூமியில் நிறுத்தும்!
மருப்பினை ( மயக்கம்) விட்டு
விருப்பினைக் கொண்டோரே
பெருக்கமாய் நிலைத்தே
பேசுபொருள் ஆனார்
தருக்களாய் உயர்ந்தார்
தரணியில் வரலாறாய்!
கீத்தா பரமானந்தன்30-01-2023