சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

மீண்டெழு!
வாழ்க்கை என்பது வரையாத புதிராய்
தாழ்விலிம் உயர்விலும் தந்திடும் பாடத்தை!
ஆழக் கடலிடை ஆயிரம் முத்துண்டு
ஆக்கிடும் முயற்சியே ஆரமென் றாக்கிடும்!

வலியெனக் கிடந்திட்டால் வழியது முடங்கும்
வனப்பினைப் பறித்து வாட்டியே வதைக்கும்!
உளிபடும் கல்லே உலகினில் சிலையென
உறுதியாய் நின்றிட உயர்வுகள் வசப்படும்!

நிரந்தரம் என்பது நிசத்தினில் இல்லை
நிமிர்வுடன் தொடர்ந்திட அகன்றிடும் தொல்லை!
வரமுடை பிறப்பிது வருந்தலை விட்டிடு
வரலாறை நிறுத்திட வாகையாய் மீண்டெழு!

கீத்தா பரமானந்தன்16-10-23