சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

விடுமுறைக்களிப்பு
உள்ளத்தில் உவகை பூக்க
உற்சாக மின்னல் தோன்றும்!
எண்ணமோ இறக்கை கட்டும்
எதிர்பார்ப்பில் கணங்கள் ஏங்கும்!

மழை கண்ட பூமியாக
மலர்ந்திடும் உறவுப் பூக்கள்!
மருவிய சொந்த பந்தம்
மருக்கொழுந்தாக மணக்கும்!

நாட்களும் விரைந்தே ஓடும்
நவமுடன் உலகும் தோன்றும்!
காலத்தின் கணக்காம் சுற்றல்
கனதியாம். கடமை சொல்லும்!

கண்களும் தூறல் கூட்ட
காசதும் கையைக் கடிக்க
வெல்லமாய் நினைவு தாங்கி
விடுமுறை முடிவுகாணும்!

நெஞ்சமும் ஈரங்கண்டே
நித்திய வாழ்வை மீட்ட
விடுமுறைக் களிப்பின் தடங்கள்
வீச்சுடன் வாழ்வை நகர்த்தும்!

கீத்தா பரமானந்தன்05-09-23